தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு : எஸ்பி ஜெயக்குமார் அறிவிப்பு|சனி 7, நவம்பர் 2020 12:41:30 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட ஊர்காவல் படைக்கு 31 ஆண்கள் மற்றும் 9 பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு :
தூத்துக்குடி மாவட்ட ஊர்காவல் படைக்கு (Home Guards) 31 ஆண்கள்,
9 பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Qualifications:இத்தேர்வில் கலந்து கொள்வதற்கு 10ம் வகுப்பு தோல்வி அல்லது தேர்ச்சி பெற்றவர்களாகவும், 18 வயதுக்கு குறையாமலும், 45 வயதுக்கு மிகாமலும் இருப்பவர்களாகவும், தூத்துக்குடி மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்களாகவும், எவ்வித குற்ற பின்னணி இல்லாதவராகவும் இருக்க வேண்டும்.
இதில் ஆர்வம் உள்ள பொதுமக்கள், அரசு பணியாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், சுய தொழில்புரிவோர் இத்தேர்வில் கலந்து கொள்ளலாம். மேற்கண்ட தகுதி உள்ளவர்கள் 2 மார்பளவு புகைப்படம் (Passport Size photo), கல்வித்தகுதிச் சான்று, ஆதார் அட்டை மற்றும் இருப்பிடச்சான்று ஆகியவற்றின் அசல் மற்றும் ஒரு சான்றொப்பமிட்ட நகல்களுடன் வரும் 24.11.2020 செவ்வாய் கிழமை காலை 10 மணிக்கு தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல்துறை அலுவலக வளாக மைதானத்தில் (District Police Office) நேரில் ஆஜராக வேண்டும்.
ஊர்க்காவல் படைவீரர்களாக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு காவல்துறையினரின் மூலம் 45 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். அதன் பிறகு பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள்.ஊர்க்காவல் படை வீரர்களுக்கு மாதத்திற்கு 5 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்படும். அவ்வாறு பணிபுரியும் ஊர்க்காவல் படையினருக்கு நாள் ஒன்றுக்கு மதிப்பூதியமாக ரூபாய் 560ஃ- வழங்கப்படும். எனவே ஆர்வமுள்ளவர்கள் இதில் கலந்து கொள்ளலாம் என்றும் இத்தேர்வுக்கு முன்கூட்டியே விண்ணப்பிக்க தேவையில்லை என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
📳 Join Our Group